முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்-
மன்னார் முசலிக்கிராம தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால் வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. பிரதேச சபையும் கலைக்கப்பட்டு விட்டது. பிரதேச சபை முந்நாள் உறுப்பினர்களுக்கு இவ்விடயம் தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கின்றனரா ?
இது நோன்பு காலம், இரவு வணக்கம் அதிகம் செய்யும் காலம். ஆகவே, முசலிக்கிராம வீதிமின்விளக்குகள் மீண்டும் பிரகாசிக்குமா ? இதற்குரிய நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பு தற்போதைய முசலிப் பிரதேசசபைச் செயலாளரையே சாரும்.
இதற்குரிய அழுத்தத்தை வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கொடுக்க வேண்டும்.