ஏ.எஸ்எ.ம்.ஜாவித்-
கட்டார் நாட்டின் சரிட்டி நிறுவனம் (கட்டார் சரிட்டி) கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் உலர் உணவுப் பொருட்களும் ஒருசில வீட்டுப் பாவனைப் பொருட்களையும்; நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
மேற்படிப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு-02, வேக்கந்தை ஜூம்ஆப்பள்ளிவாசலில் நேற்று (06) மாலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் சார்ச் டி எபயர்ஸ் இப்ராஹிம் அப்துல்லாஹ் அல்- சுரைம், கட்டார் சரிட்டியின் கன்றி டிரைக்டர் அமீன் அப்துல்லா றஹீம், தூதரகத்தின் பிரதான கணக்காளர் அனஸ் ஏ மஜீட்ஈ ஜமியதுல் உலமாவின் பிரதிநிதிகள், நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படிப் பொருட்கள் பாதிக்கப்பட்ட சகலருக்கும் ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் (ஆர்.சி.சி) ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளது.