கத்தாரில் வெற்றிகரமாய் நடைபெற்ற ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் அறிமுக நிகழ்வு...!

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பாளரும்,கவிஞருமான எஸ்.ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் அறிமுக விழா மற்றும் இலங்கை நண்பர்கள் ஒன்றுகூடல் என்பன ECM PVT (ltd) ஏற்பாட்டில் நேற்றைய தினம் மாலை (05.05.2016) டோஹாவில் அமைந்துள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் கேட்போர்கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

பொறியியலாளர் அபூதாலிப் எம்.ரிஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ECM PVT (LTD) இன் பணிப்பாளர் நாயகமும், நாபீர் பவுண்டேசன் ஸ்தாபகரும், முதுகலை முதுமாணியுமான அல்ஹாஜ். நாபீர் உதுமான்கண்டு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

கௌரவ அதிதியாக சிரேஷ்ட கணிய அளவீட்டாளர்,தொழிற்கல்வி விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.முனாஸ் அவர்களும் மற்றும் சிறப்பதிதிகளாக கத்தாரில் தொழில் புரியும் பொறியியலாளர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள்,கலை இலக்கிய நண்பர்கள்,நண்பர்கள் என பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர்.

கத்தார் வரலாற்றில் வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் எஸ்.ஜனூஸின் ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூலின் முதற்பிரதியை சிரேஷ்ட கணிய அளவீட்டாளர்,தொழிற்கல்வி விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.முனாஸ் பெற்றுக் கொண்டார். மேலும், இங்கு எஸ்.ஜனூஸின் முந்திய படைப்புகளான ‘தாக்கத்தி’ கவிதைத் தொகுதி, ‘குரலாகி’ கவிதை ஒலி-ஒளி இறுவட்டு,பெத்தம்மா திரைப்படம், சவால் பாடல் அல்பம் என்பனவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. 

குரலாகி இறுவட்டின் முதற்பிரதியை பொறியியலாளர் அபூதாலிப் எம்.ரிஷாத்தும் பெத்தம்மா திரைப்படத்தின் முதற்பிரதியை நாபீர் பவுண்டேசன் சார்பாக யூ.எல்.எம்.றமீஸ் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் ’மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ நூல் அறிமுகத்தை பிரகாசக்கவி அன்வரும், தலைமையுரையை அபூதாலிப் எம்.ரிஷாத்தும்,சிறப்புரையை எம்.எஸ்.எம்.முனாஸும் நிகழ்த்தினர். கவிஞர்களான ரோஷன் ஏ.ஜிப்ரி,ஜனவாசனும் கவி வாழ்த்துப் பாடினர். எஸ்.ஜனூஸின் குரலாகி இறுவட்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘மாடு போல முட்டுதுகா’ மற்றும் ‘என்ன இல்ல கிழக்கில’ ஒலி ஒளி கவிதைகள் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டன. எஸ்.ஜனூஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.விழாவின் பிரதம அல்ஹாஜ்.நாபீர் உதுமான்கண்டு பிரதம அதிதி உரையாற்றினார். 

ECM PVT LTD மற்றும் நாபீர் பவுண்டேஷன் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பையும் ஏற்பாட்டையும் கவனித்தனர். கவிஞர்களான பிரகாசக்கவி அன்வரும்,ஏறாவூர் ஜலீலும் திறன்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு வித்தியாசமான முயற்சியாகவும், விமர்சையாகவும் நடைபெற்ற ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ அறிமுகம் மற்றும் நண்பர்கள் ஒன்றுகூடல் என்பன இலங்கையின் கலை இலக்கிய செயற்பாடுகளில் புதிய திருப்பத்தை பதிவு செய்திருப்பது வரவேற்ப்பிற்கும் பாராட்டுக்குமுரியதாகும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -