ரோயல் கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அதிரடி விஜயம் : ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

பா.திருஞானம் - 
ல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் பிரிவுற்கு இன்று (27.05.2016) அதிரடி விஜயம் ஒன்றினை மேற்க் கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ் பிரிவிற்கான பிரதி அதிபர் மற்றும் தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்து கலந்து உரையாடினார். 

இதன் போது கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தான, மேலதிக செயலாளர் ஹேவகே கல்வி அமைச்சின் தமிழ் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் எஸ்.முரளிதரன். தேசிய பாடசாலைகளுக்கான உதவி கல்வி பணிப்பாளர் இர்ஷாட், அமைச்சரின் செயலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

மேற்படி ரோயல் கல்லூரியின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் பின்னடைந்து வருவதற்கான காரணங்களும் அதனை அபிவிருத்தி செய்வதற்கான விடங்களும் கலந்துறையாடலில் இனங்கானப்பட்டு அவை நிவர்த்தி செய்வதற்கு ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு மாதகால கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த பாடசாலையில் பத்து வருடத்திற்கு மேல் தொடர்ந்து ஆசிரியர்களாக கடமையாற்றிவர்கள் சுற்று நிருபத்திற்கு அமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றமும் செய்ய்படவுள்ளது. இதற்கான பனிப்பினை கல்வி இராஜாங்க அமைச்சர் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விடுத்தார்.

தற்போது இப்பாடசாலையில் பாட ரீதியிலான ஆசிரியர் குறைபாடுகள், சிங்கள பிரிவின் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகைளில் தமிழ் பிரிவின் பெறுபேறுகள் பின்னனடைவு, சில பௌதிகவள குறைபாடுகள், முகாமைத்துவத்தில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் போன்றன இனம் காணப்பட்டுள்ளது. 

இந்த குறைபாடுகளையும் ஓரு மாக காலத்திற்குள் நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்க் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் பிரதான பாடசாலையில் ஒன்றான இந்த பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்ட்டுள்ளது. 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -