கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தொடர்பில் அவரிடம் அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கடற்படைப் பிரிவிடமிருந்தும் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் குறிப்பிட்ட இரு அறிக்கைகளையும் ஜனாதிபதியிடம் பிரதமர் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி வருகை தந்து, பின்னர் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கும் வரையில் ஊடகங்களிடம் எந்தவொரு தகவலையும் எந்தக் கருத்தையும் இரு தரப்பும் தெரிவிக்க வேண்டாம் என பிரதமர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
