கிழக்கு மாகாண முதலமைச்சரும் பொறியியலாளருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் 2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிகளவான நிதியானது கல்குடா பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை 26.05.2016 வியாழக்கிழமை கோறபற்று பிரதேச சபையின் செயலாளரும் , ஆணையாருமான எஸ்.எம்.ஷிஹாப்டீன் தலைமையில் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந் நிகழ்விற்கு பிரதம அதீதியாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீட உறுப்பினரும் கணகறிஞருமான எச்.எம்.எம்.றியாழ், மற்று அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கோறளைப்பற்று பிரதேச கிராமங்களான செம்மண்ணோடை, நாசிவந்தீவு, கிண்ணையடி, மாவடிச்சேனை, பிறைந்துறைச்சேனை, வாழைச்சேனை, போன்ற பிரதேசங்களில் 250 இலட்ச்சம் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான அங்குராப்பன நிகழ்வு இடம்பெறவுள்ளது முக்கிய விடயமாகும். அத்தோடு கோறளைபற்று மேற்கு பிரதேச செயலக பிரவிலுள்ள ஓட்டமாவடி மீராவோடை பிரதேசங்களிலும் முதலமைச்சரினால் பல அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.