எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாயில் ஒன்றரை வயதுக்குழந்தை ஐந்து ரூபாய் பணத்தினை விழுங்கி அது தொண்டையில் விழுங்கிய நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார்.
கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நுஸ்கா வயது ஒன்றரை வயது குழந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) பகல் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த நிலையிலே குறித்த குழந்தை ஐந்து ரூபாய் பணம் தொண்டையில் இறுகியே வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.