அரநாயக்க சிறிபுர கிராமத்தில் வசித்து வந்த கே.டி.பியசேன ஒரு அதிர்ஷ்டலாபச் சீட்டு வியாபாரி. ஏழ்மைக் குடிலில் வாழ்ந்தாலும் பரந்த மனம் படைத்த பியசேனவுக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
மூத்த மகன் அன்றாடம் வாங்கிக்கொடுக்கும் 100 அதிர்ஷ்டலாபச் சீட்டுகளை விற்பனை செய்து தன்னிறைவடைந்தார். மனதில் வலிகளைச் சுமந்து கண்ணீர் ததும்ப கதைக்கிறார் பியசேன-
“அன்று மூத்த மகனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்பா கடும் மழை பெய்கிறது. உடனடியாக வீட்டுக்கு வாருங்கள். பாதுகாப்பாக இருப்போம் என்று அழைத்தான் என் மகன்.
நான் சற்றுத் தாமதமாகவே சென்றேன். என் கிராமத்தை பார்க்கும்போது நான் வேறு தேசத்திலா இருக்கிறேன்? இது கனவா என்று யோசித்தேன். சிறிபுர மலை எங்கள் கிராமத்தையே அழித்திருந்தது.
என் மனைவியும் ஆசை மகன்மாரும் உயிரோடு இருக்க மாட்டார்களா என இறைவனை கெஞ்சிக் கெஞ்சி வேண்டிக்கொண்டிருக்கிறேன்” (மூலம்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்) பியசேனவை போல எத்தனையோ பேர்...!
இயலாதவர்கள் பிரார்த்திப்போம் - இயலுமானவர்கள் எந்த வழியிலாவது உதவுவோம். இங்கே கிளிக் செய்தி ஒரு ரூபாய் எனும் உதவுங்கள்
