அமைச்­சர்­களின் விட­ய­தா­னங்­களில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் தீர்­மா­னம்

நல்­லாட்சி அரா­சங்கம் அமைக்­கப்­பட்டு ஒரு­வ­ருடம் நான்கு மாதங்­களில் அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் மேற்­கொண்ட முன்­னேற்ற நட­வ­டிக்­கை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அமைச்­சர்­களின் விட­ய­தா­னங்­களில் பல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  

அர­சாங்கம் எடுத்­துள்ள இந்த தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைச்­ச­ரவை திருத்­தங்கள் அல்­லாமல் அமைச்­சர்­க­ளுக்குள் மாத்­திரம் விட­ய­தா­னங்­களில் மாற்­றத்தை மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் வட்­டார தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அத­ன­டிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்­துக்கு ஒரு­வ­ரு­ட­காலம் பூர்த்­தி­யாகும் போது அமைச்­சர்­களின் விட­ய­தா­னங்கள் மாற்றும் நட­வ­டிக்­கையை முற்­றாக நிறை­வு­செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் குறிப்­பிட்ட அமைச்­சுக்­களின் விட­ய­தா­னங்­களில் ஏற்­படும் மாற்­றங்­களை வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் பிர­சு­ரிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது.

துறைகள் மாற்­றப்­படும் அமைச்­சர்­களுள் ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்­பட பிர­பல அர­சி­யல்­வா­திகள் பலர் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் ஐக்கிய தேசிய முன்­ன­ணியின் பிர­பல அமைச்­சர்­க­ளிடம் இருக்கும் 2 துறை­களை அதே முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளுக்கு கொடுப்­ப­தற்கும் உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -