நாய்­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்­டிய நிலை

வெள்­ளைக்­காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலை­தூக்­கி­யுள்­ளது. நாய்­க­ளுக்­கான அனு­மதிப் பத்­தி­ரத்­திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது எனத் தெரி­வித்த பொது எதிர்க்­கட்­சி­யினர்.

சிறு­நீ­ரக நோயா­ளர்­களின் இரத்தப் பரி­மாற்றம் செய்யும் கட்­ட­ணத்­திற்கும் புற்று நோயா­ளர்­களின் எக்ஸ்­ரேக்கும் 15 வீத வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் குற்­றம்­சாட்­டி­யது.

பாரா­ளு­மன்ற குழு அறையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற பொது எதி­ர­ணி யின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்­டி­லேயே இக்கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன.

பொது எதி­ர­ணி­யினர் இங்கு மேலும் கருத்து வெளியி­டு­கையில்;

இலங்­கை­யர்­க­ளிடம் அனைத்து விட­யங்­க­ளிலும் வெள்­ளைக்­கார ஆட்­சி­யா­ளர்கள் வரி­களை அற­விட்­டனர். இன்று நாட்டில் மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு வெள்­ளைக்­கார ஆட்சி தலை­யெ­டுத்­துள்­ளது.

எதிர்­கா­லத்தில் நாய்க்கும் மனித உட­லுக்கும் வரி செலுத்த வேண்­டிய நிலை ஏற்­படும். சிறு­நீ­ரக நோயா­ளர்­களின் இரத்­தப்­பரி­மாற்றம் புற்று நோயா­ளர்கள் “எக்ஸ்ரே” உட்­பட அனைத்து மருத்­து­வர்­க­ளுக்கும் 15 வீத வற்­வரி அற­வி­டப்­ப­டு­கின்­றது.இது பெரிய அநீ­தி­யாகும்.

கடந்த ஆட்­சியில் வற்­வ­ரி­யா­னது தொலை­பேசி கட்­ட­ணங்கள், சுகா­தார சேவைகள், மின் கட்­ட­ணங்­க­ளுக்கு விலக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் இன்று இவை­ அனைத்­திற்கும் வற்வரி அறிவிடப்படவுள்ளது. இதனை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கலாம். நாமும் நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -