காலத்தால் அழிக்க முடியாத காதான்குடியின் அரசியல் சரித்திரம் ஹிஸ்புல்லாஹ்...!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
1963ம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி முகம்மது ஆலிம் என்பவருக்கு மகனாய் பிறந்து தொடர்ந் தேர்சியாக 27 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் சரித்திரம் படைக்கும் அரசியல்வாதியாக பரினமித்து தனது அரசியல் சானக்கியத்தினால் அரசியல் வீறு நடையுடன் அரசியலில் முதிர்ச்சி பெற்று அதில் பல விடயங்களை நிலைமைக்கேற்றவாறு சாதுரியமான முறையில் குறித்த நேரத்தில் முடிவுகளை எடுக்ககூடிய காத்தன்குடி மண்ணின் அரசியல் நாயகனாகவே நான் தற்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினை பார்க்கின்றேன்.

கலை பிரிவில் கண்டி பேரதனை பல்கலை கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்த ஹிஸ்புல்லாஹ் அதற்கு பிற்பாடு சென்னை பல்லகலை கழகத்தில் தனது எம்.ஏ. பட்டத்தினை நிறைவு செய்கின்றார். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட இடமாக கருதப்படுகின்ற காத்தான்குடி நகரில் பெரும் தலைவர் அஸ்ரப்பினால் இனம் காணப்பட்ட இளைஞனாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு 1987ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச சபை உறுப்பினராகவும், அதற்கு பிற்பாடு இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வினை நோக்கி கால் எடுத்து வைக்கின்றார். 

அக்காலகட்டத்திலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கால தலைவன் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களும் ஹிஸ்புல்லாவை துடிப்பான அரசியல் தலைவன் என்று பேசிய வரலாற்றினை எவராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையிலே 1989ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அதிகாரத்தின் கீழ் இருந்த பாராளுமன்றம் கலைக்கபட்டு மீண்டும் ஒரு பாராளுமன்ற தேர்தலை எமது நாடு எதிர் நோக்கி நிற்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் அவர்களின் நேரடி வழிகாட்டலோடு பரவலான முறையில் பல வேட்டாளர்கள் வடகிழக்கு மாகாணத்தில் களத்தில் நிறுத்தப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என்ற மூன்று பிரதேசங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி முக்கிய மூன்று வேட்பாளர்களை பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் களமிறக்குகின்றார். 

அத்தோடு மூவறும் தமக்கென விருப்பு வாக்குகளை கேட்பதினை புறம்தள்ளி விட்டு கட்சிக்கு வாக்குகளை பெற்றுக்கொள்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு ஆசனம் கைப்பற்றியதற்கு பிற்பாடு சுழற்ச்சி முறையில் இரண்டு வருடங்களாக மூன்று ஊர்களுக்கும் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற ஒப்பந்தமற்ற வாக்குறுதியும் வேட்பாளர்களிடமிருந்து பெரும் தலைவரினால் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. 

இறுதியில் 15832 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி முதலாவது முறையாக பாராளுமன்ற கதிரையில் உட்காருகின்றார்.

இரண்டு வருடங்கள் உருண்டோடுகின்றது. அடுத்த கட்டமாக ஏறாவூருக்கு அல்லது கல்குடாவிற்கு பாராளுமன்ற பிரிதி நிதித்துவத்தினை ஹிஸ்புல்லா விட்டுகொடுப்பு செய்ய வேண்டும் என்ற பெரும் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க ஹிஸ்புல்லாவிடம் தெளிவு படுத்திய பொழுது ஹிஸ்புல்லாஹ் அதனை மறுதளிக்கின்றார். 

அன்று ஹிஸ்புல்லா மறுதளித்தமையானதை இன்றும் அரசியல் மேடைகளில் ஹிஸ்புல்லாவினை எதிர்த்து வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றவர்கள் அரசியல் ஆயுதமாக தூக்கிபிடிக்கின்றனர். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

மறு பக்கத்திலே அன்று தான் மறுதளித்தமையானது அன்றைய யுத்தகால சூழ் நிலையில் முஸ்லிம்கள் எதிர் நொக்கிய பிரச்சனைகளும், காத்தான்குடி ஏறாவூர், கல்குடா பிரதேசங்களில் தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் முஸ்லிம்கள் பள்ளிவாயல்களிலும், வீடுகளில் தூங்குகின்ற நிலைமைகளிலும்,

துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட காரணத்தினலால் மூன்று ஊர்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்கு அரசியல் ரீதியாக துடிப்பான இளைஞன் ஒருவன் தேவை என்பதனை கருத்தில் கொண்டே நான் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தினை இராஜினாமா செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொண்டேன் என ஹிஸ்புல்லா இராஜனாமா செய்யாமைக்கான தனது பக்க நியாயத்தினை கூறுகின்றார்.

அதற்கு நியாயம் கற்பிப்பது போலவே 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நேரம் விடுதலை புலிகளினால் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பொழுது அக்காலகட்ட பயங்கரவாத சூழ்நிலைமையினையும் கருத்தில் கொள்லாமல் தனியொரு அரசியல் வாதியாக களத்தில் நின்று செயற்பட்டமையினையும் மறுக்க முடியாது. 

அது மட்டுமல்லாமல் கல்குடா, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களை விடுதலை புலிகளிடமிருந்து 1990ம் ஆண்டு காலப்பகுதில் பாதுகாக்கும் முகமாக ஊர்காவற்படைகளை அமைத்தும், வீதிக்கு வீதி காவல் அரங்குகள், பங்கர்கள் அமைத்து துடிப்பாக செயற்பட்டமையினை எவறாலும் மறுத்துரைக்கவும் முடியாது. இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலாக அன்று பெரும் தலைவருக்கு கொடுத்த வாக்குறுதியினை ஹிஸ்புல்லா மீறியிறுந்தார் என்றால் பெரும் தலைவரினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை விட்டும் ஹிஸ்புல்லாஹ் தூக்கி வீசி எறியப்பட்டிருபார். 

ஆனால் பெரும் தலைவர் அஸ்ரப்பின் தூர நோக்கு பார்வையாலேயே ஹிஸ்புல்லாவின் அரசியல் பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஹிஸ்புலாஹ் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் வபாத்தாகும் வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலேயே ஒட்டிக்கொண்டிருந்தார்.

இவ்வாறு ஹிஸ்புல்லாவின் அரசியல் முன்னெடுப்புக்கள் சென்று கொண்டிருக்க கல்குடாவினை பிரதி நிதித்துவப்படுத்தி 1989ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்ட மர்ஹூம் மொஹைதீன் அப்துர் காதார் ஹிஸ்புலாவிற்கு எதிராக பெரும் தலைவர் ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க தவரிவிட்டார் என்பதனை காரணம் காட்டி 1994ம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட அதே தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி நகரினை பிரதி நிதித்துவப்படுத்தி போட்டியிட்ட ஹிஸ்புல்லாஹ் மீண்டும் 12583 விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக பாராளுமன்ற கதிரையில் உட்காருகின்றார். 

இக்கால கட்டமானது இலங்கையில் பாரிய யுத்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட காலமாக இருந்தாலும் தன்னிடம் காணப்பட்ட அரசியல் சானக்கியத்தினால் காத்தான்குடி நகருக்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். அதுமட்டுமல்லாமல் கல்குடாவிலும் அபிவிருத்திகள், அரச வேலைவாய்ப்புக்கள் என மாவட்டம் தழுவிய பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார். இக்காலகட்டதில் அவர் தபால் தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோடு முரண்பட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட மொஹைதீன் மர்ஹூம் அப்துர் காதர் மீண்டும் சிறீலங்கா மீண்டும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு 2000ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கல்குடாவில் வேலி கட்டிய அரசியலோடு போட்டியிட ஹிஸ்புல்லா தனது பாராளுமன்ற கதிரையினை இழக்கின்றார். 

இருந்தாலும் ஹிஸ்புல்லாஹ் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக நியமிக்கப்படுகின்றார். ஆனால் பாராளுமன்றம் ஒரு வருடம் கூட நிலைத்திருக்க வில்லை. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இஸ்தாபக தலைமையான பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களை இழந்து தவிக்கின்ற நிலையில் கட்சியின் தலைமை பொறுப்பானது தற்போதைய அமைச்சர் அப்துர் றவூப் ஹக்கிமிடம் கைமாறுகின்றது.

இந்த நிலையில் கட்சியினை விட்டு வெளியேறிய ஹிஸ்புலாஹ் தொடர்ந்து 2001ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பில் போட்டியிட்டு 19785 விருப்பு வாக்குகளோடு மூன்றாவது முறையாகவும் பாராளுமன்ற கதிரையில் உட்காருகின்றார். இக்காலப்பகுதியிலும் காத்தான்குடி நகரம் ஹிஸ்புல்லாவின் பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையானது காத்தான்குடி மக்களின் உள்ளங்களில் இருக்கும் என்பதில் மாற்றுக்கருதிருக்காது. 

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கே தொடர்ந் தேர்சியாக 12 வருடங்கள் வாக்களித்த காத்தான்குடி மக்கள் ஹிஸ்புல்லா எனும் அரசியல் தலைமையின் மேல் வைத்திருந்த நம்பிக்கை, மரியாதையின் பிரதிபளிப்பாக அவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை விட்டு வெளியேறி பெரும்பான்மை கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட போதும் காத்தான்குடி மக்கள் ஹிஸ்புல்லாவினை கெளரவப்படுத்தி மூன்றாவது முறையாகவும் பாராளுமன்ற கதிரையில் உடகார வைத்தனர். 

இது ஹிஸ்புலாவின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்பு முனையாகவும் பாரிய வெற்றியகவுமே பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலே சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலே 2004ம் ஆண்டு பல அரசியல் தளம்பல்களால் பாராளுமன்றம் கலைக்கப்பட கல்குடா பிரதேசத்தில் புதுமுக வேட்பாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் தற்போதைய பிரதி அமைச்சர் அமீர் அலீயும், ஏறாவூரினை பிரதி நிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தும் போட்டியிட மீண்டும் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்றார். 

மும்முனை போட்டியாக அமைந்த அத்தேர்தலில் இறுதியில் அமீர் அலி அவர்கள் முதலாவது முறையாக பாராளுமன்ற கதிரையில் உட்கார பசீர் சேகுதாவூத் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலே போட்டியிட்டாலும் சொற்ப வாக்குவித்தியாசத்தினால் தோல்வியினை தழுவுகின்றார். மறுபக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் விசுவாசத்தினை வென்ற வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட காத்தன்குடியின் அரசியல் வரலாற்று நாயகன் ஹிஸ்புல்லா தான் என்றும் இல்லாதவாறு 23813 விருப்பு வாக்குகளை பெற்றும் துரதிஸ்ட்டவசமாக தோல்வினை தழுவும் நிலையே ஏற்படுகின்றது. 

ஆனாலும் ஒட்டு மொத்த காத்தான்குடி மக்களும் இரவோடிரவாக முடிவெடுத்து ஹிஸ்புல்லாவிற்கே வாக்களித்திருந்தமை காத்தான்குடி மக்களின் செல்லப்பிள்ளை ஹிஸ்புல்லா என்பதனை அத்தேர்தல் எடுத்துக்காட்டியது.

ஹிஸ்புல்லாவிற்கு இத்தோல்வியானது சுமார் ஆறு வருடங்கள் பாராளுமன்ற கதிரையில் உட்காருக்கின்ற வாய்ப்பினை கொடுக்காமல் அரசியல் ரீதியாக பல சோதனைகளை கொடுத்தாலும் இவ் ஆறு வருட காலப்பகுதியில்தான் ஹிஸ்புல்லாவினால் தான் எதிர்காலத்தில் எவ்வாறு தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்பது சம்பந்தமான பல அரசியல் யுக்திகளை கையாண்டிருந்தார். 

மீண்டும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து அதன் தலைமை அமைச்சர் றவூப் ஹக்கீமின் கையினை பலப்படுத்திய ஹிஸ்புல்லாஹ் 2006ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபையினை முஸ்லிம் காங்கிரசின் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டு வந்து காத்தன்குடி மக்கள் எப்பொழுதும் தன்னுடனே இருக்கின்றனர் என்பதனை முஸ்லிம் காங்கிரசிற்கும் தேசியத்திற்கும் எடுத்துக்காட்டினார். 

இது ஹிஸ்புல்லாவின் அரசியல் ஆளுமையினையும் காத்தன்குடி மக்கள் மத்தியில் ஹிஸ்புல்லாவிற்கு இருந்த நற்பெயரினையும் எடுத்துகாட்டுவதாக அமைந்தது.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரசில் இருக்கையில் 2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலை கிழக்கு மாகாணம் எதிர் நோக்கி நிற்கின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனது வேட்பாளர்களை இறக்க போகின்றது என மக்கள் உள்ளங்களில் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கதக்க ஹிஸ்புல்லா திடீர் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து மகிந்த ராஜபக்ஸ்ச அரசாங்கத்திற்கு தனது ஆதரவினை தெரிவிக்கின்றார். 

இது கிழக்கு மாகாண சபை தேர்தலிலே பாரிய அரசியல் திருப்பு முனையாகவும் அமைந்தது. அது மட்டுமல்லாமல் எதிரும் புதிருமாய் மாவட்டத்தில் அரசியல் செய்து கொண்டிருந்த ஹிஸ்புல்லாவும் அமைச்சர் அமீர் அலியும் ஒன்றிணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலமாக கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களை மையப்படுத்தி மூன்று வேட்பாளர்களை களமிறக்குகின்றனர்.

முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற தொனிப்பொருளில் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்க மறுமுனையிலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பாக அதன் தலைமை, செயலாளர் நாயகம்,தவிசாளர் போன்றவர்கள் தங்களது பாராளுமன்ற பதவியினை இராஜானாம செய்து விட்டு கிழக்கு மாகான சபையினை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு தங்களது அரசியல் போராட்டத்திலே குதிக்கின்றனர். 

அதுமட்டுமல்லாமல் முக்கியமான தனியார் தொலைகாட்சி ஒன்று பகிரங்கமாகவே ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தேர்தல் விளம்பரங்களை மேற்கொள்கின்றது. எதற்கும் சளைக்காதவராக ஹிஸ்புல்லா தனது அரசியல் பிரச்சார நடவடிகைகளை மேற்கொள்கின்றார். ஏறாவூர் காத்தான்குடி, கல்குடா என்ற வேறுபாட்டிற்கு அப்பால் மூன்று ஆசனங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொள்ள வேண்டும் என்ற அடிப்படை விடயத்தினை வைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியில் அந்த கணவும் நனவாகின்றது.

முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் தேர்தல் பிரச்சாரத்தினை முடுக்கி விட்டிருந்த ஹிஸ்புல்லா இறுதில் கிழக்கு மாகான சபையினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றிய நிலையிலும் கூட கிழக்கு மாகான சபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டிணைந்து தேர்தலில் களமிறங்கிய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்ச்சியினை சேர்ந்த சிவனேசதுறை சந்திர காந்தன் நியமிக்கப்பட்டார். 

இது அன்றைய அரசாங்கத்தின் கட்டாயத் தேவையாகவும் காணப்பட்டது. இதனால் முஸ்லிம் சமூகத்தினை காட்டிக்கொடுத்து விட்டார் என பலவாறு சிறீலங்கா முஸ்லிம் காஙிரஸ் ஆதரவாளர்களாலும், கட்சியின் உறுப்பினர்களாலும், தலைமையினாலும் விமர்சிக்கப்பட்டு வந்த ஹிஸ்புல்லாவிற்கு கிழக்கு மகாணா சபையில் மிக முக்கிய பொறுப்புடனான, 

சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய, சமூக நலனோம்பல், சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள், மகளிர் விவகார, இளைஞர் விவகார, விளையாட்டு, தகவல் தொழில்நுட்ப கல்வி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல் மற்றும் விநியோகம் என்ற அமைச்சு வழங்கப்பட்டது. இது ஹிஸ்புல்லாவின் அரசியல் சானக்கியத்திற்கும், அரசியல் முதிர்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன்.

அது மட்டுமல்லாமல் தனக்கு மாகாண சபையில் கிடைத்த அமைச்சினை வைத்துக்கொண்டு மாவட்டத்திலே பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்ட ஹிஸ்புல்லா மகிந்த ராஜபக்ஸ்ச அரசாங்கத்துடனும் அந்த அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸ்சவுடனும் நெருக்கிய நட்பினை உறுவாக்கிக் கொண்டார். 

இதனால் காத்தான்குடி நகரம் மேலும் பல அப்விருத்திகளை கண்டது. இந்த நிலையிலே இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ்ச தெரிவு செய்யப்பட மீண்டும் 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நாடு எதிர் நோக்குகின்றது. ஹிஸ்புல்லா மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடுகின்றார்.

எறாவூரில் அலிசாஹிர் மெளலான கல்குடாவில் அமீர் அலி காத்தான்குடியில் ஹிஸ்புல்லா என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து தங்களது வேட்பாளர்களை மட்டக்களப்பு மாவட்டத்திலே களமிறக்குகின்றது. வழமைபோல ஒட்டுமொத்த காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாவினை மதித்து வாக்களிக்க ஹிஸ்புல்லா 22256 விருப்பு வாக்குகளை பெற்று நான்காவது முறையாகவும் பாராளுமன்ற கதிரையில் உட்காருகின்றார். 

இது ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த பாரிய வெற்றியாக நான் கருதுகின்றேன். அது மட்டுமல்லாமல் காத்தான்குடி மக்கள் எப்பொழுதும் அவருடன் இருக்கின்றார்கள் என்பதற்கு கிடைத்த பாரிய சான்றாகவும் இத்தேர்தல் ஹிஸ்புல்லாவிற்கு எடுத்துக்காட்டியது.

2010 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிற்பாடு ஹிஸ்புல்லா சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சராக நியமிகப்படுகின்றார்.அதனை தொடர்ந்து தொடர்ந்து ஜனவரி 2013 இல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 

இக்காலப்பகுதியிலேயே காத்தான்குடி நகரத்தினை தேசியத்திலே அதிகம் பேசப்படும் நகரமாக மாற்றியமைக்கின்றார். மத்திய கிழக்கு செல்வந்த நாடுகளில் உள்ள நகரங்களைப் போன்று காத்தான்குடி நகரம் ஹிஸ்புல்லாவினால் அபிவிருத்தியடைகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தினராலும் காத்தான்குடி நகரமானது குட்டி சவூதி அராபியா என்று வர்ணிக்கபடும் அந்தளவிற்கு ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திகளும், அரசியல் முன்னெடுப்புகளும் பின்னூட்டியாக அமையப்பெறுகின்றது. 

அதனையும் தாண்டி தனது வாக்குவங்குயினை கல்குடா, ஏறாவூர் என பறந்து பட்ட நிலையில் தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஹிஸ்புல்லா எறாவூர் கல்குடா, மட்டக்களப்பு பிரதேசங்களிலும் தனது அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார் என்பதை மாவட்டத்தில் வாழுகின்ற எவராலும் மறுதளிக்க முடியாது.

இந்த நிலையிலே 2012ம் ஆண்டு கிழக்கு மகான சபையானது தனது இரண்டாவது ஆட்சிகாலத்திற்கான தேர்தலினை எதிர் நோக்குகின்றது. ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்க்கையில் அவருடைய சொந்த ஊரான காத்தான்குடியில் எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் இரண்டாவது மாகாண சபை தேர்தலில் நலாட்சிக்கான தேசிய முன்னணி எனும் கட்சியின் பாரிய சவாலினை ஹிஸ்புல்லா எதிர் நோக்க நேரிடுகின்றது. 

அதன் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானை எதிர்த்து ஒரு பொறியியலாளரையே களமிறக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கிற்கு அரசிய முகவரி கொடுக்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அகில இலங்கை மகள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கின்றார். 

மறுபக்கத்திலே முதலமைச்சினை நோக்கிய பயணம் என்ற வாசகங்களோடு முன்னாள் அமைச்சர் அமீர் அலி கல்குடாவை பிரதி நிதித்துவப்படுத்தியும், ஏறாவூரினை பிரதி நிதித்துவப்படுத்தி முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் சுபைரும் கூட்டிணைந்து போட்டியிடுகின்றனர். மீண்டும் களமிறக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றியடைகின்றனர். இதுவும் ஹிஸ்புல்லாவின் சாதுரியமான அரசியல் நடவடிக்கைக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

இதற்கு பிறகுதான் தேசியத்திலேயும் மாவட்டத்திலேயும் ஹிஸ்புல்லா தனது அரசியல் வாழ்க்கையினை வைத்து பேசப்படும் முக்கிய நபராக பரினாமம் எடுக்கின்றார். அதாவது கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் பேறுவளை சம்பவம், ஹலால், பிரச்சனை என பல பிரச்சனைகளுக்கு இலங்கை முஸ்லிம்கள் முகம் கொடுத்த நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்றின் தேவைப்பாட்டின் காரணமாக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவிற்கு அதரவளிக்க தயாராகின்றனர். 

இந்த நிலையிலேயேதன் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் கீழ் அமைச்சர் பதவிகள் என பல சுகபோகங்களை அனுபவித்து கொண்டிருந்த அணைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் சமூகத்தின் மத்தியில் தங்களது அரசியல் இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக மைத்திரிபால சிறீசேனவின் கூட்டணியுடன் கைகோறுக்கின்றனர். 

ஆனால் ஹிஸ்புல்லா நன்றி உடைய ஓர் முஸ்லிம்மாக மஹிந்தவுடனே இருக்கின்றார். இதனால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அவரின் சொந்த ஊரானா காத்தான்குடியிலும் பாரிய அரசியல் எதிர்ப்பினையும் சம்பாதித்துகொள்கின்றார்.

ஹிஸ்புல்லாவின் அந்த முடிவானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பிழையாக கருதப்பட்டாலும் தேசிய அரசியலிலே ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்த நன்றி மறவா அரசியல்வாதி என்ற பெயரினை ஹிஸ்புல்லாவிற்கு கிடைப்பதற்கு வழியமைத்தது. 

அது மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் சமூகமும் மைத்திரிபால சிறீசேனவிற்கு ஆதரவளித்த நிலையில் தப்பித்தவறி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை மஹிந்த அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றுவதற்கு ஹிஸ்புல்லாவினால் மட்டுமே முடிந்திருக்கும் என்பது ஓர் எதிர்வு கூறப்பட்ட உண்மையாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலும் முடிவடைந்து மைத்திரிபால சிறீசேனவும் வெற்றி பெற்றிருந்தார். 

அத்தோடு ஹிஸ்புல்லாவின் அரசியல் பயணமும் நிறைவு பெற்று விட்டது என ஹிஸ்புல்லாவின் அரசியல் எதிரிகள் கங்கணம் கட்டிகொண்டு ஜனாபதிபதி தேர்தலுக்கு பிற்பாடு வந்த பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகின்றனர்.

எந்த தேர்தலிலும் இல்லாதவாறு மாவட்டத்திலும், தனது சொந்த ஊரான காத்தான்குடியிலும் ஹிஸ்புல்லா கடந்த 2015 பாராளுமன்ற தேர்தலில் பல சவால்களை சந்திக்கின்றார். தான் அறிமுகப்படுத்திய ஷிப்லி பாரூக் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து சொந்த ஊரிலே போட்டியிட, அதற்கும் ஒரு படி மேலாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் அப்துர் ரஹ்மான் முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டிணைந்து காத்தான்குடியிலே வேட்பாளராக களமிறங்குகின்றார். 

கல்குடாவிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானை சின்னத்திலே அமீர் அலியினை களமிறக்க முஸ்லிம் காங்கிரஸ் புதுமுக வேட்பாளர் றியாலினை கல்குடாவில் களமிறக்கி ஏறாவூரிலே முக்கிய புள்ளியாக இருக்கின்ற அலிசாஹிர் மெளலானவைனை களமிறகுகின்றது. இவைகள் அனைத்தும் ஹிஸ்புல்லா தனது அரசியல் வாழ்க்கையில் என்றும் கண்டிராத பாரிய சாவால்கள் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. 

அத்தனை சவால்களையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடனும், எப்பொழுதும் காத்தான்குடி சமூகம் தன்னுடனையே இருந்து வந்திருக்கின்றது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் சவாலினை சமாலித்து ஐந்தாவது முறையாகவும் தன்னால் பாராளுமன்ற கதிரையில் உடகார முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமையின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குகின்றார் ஹிஸ்புல்லா.

இறுதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஏறாவூரில் போட்டியிட்ட அலிசாஹிர் மெளலான வெற்றி பெற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட அமீர் அலி நூற்றுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே ஹிஸ்புலாவினை வெற்றிகொண்டு பாராளுமன்றம் செல்கின்றார். 

ஹிஸ்புல்லா தோற்கடிக்கபட்டு விட்டார் என ஹிஸ்புல்லாவின் அரசியல் எதிரிகள் வெற்றிவாகை சூடிக்கொண்டிருந்த நேரத்தில் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற யதார்தத்தின் வடிவமாய் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற கதிரையில் உட்காருகின்ற வாய்ப்புடன் சில நாட்களுக்கு பிற்பாடு இறைவனின் நாட்டப்படியினால் இராஜாங்க அமைச்சு பதவியும் ஹிஸ்புல்லாவினை தேடிவந்தமையானது ஹிஸ்புல்லாவிற்கு தேசிய அரசியலிலே இருக்கின்ற சிறந்த அரசியல்வாதி என்ற பெயருக்கு கிடைத்த சன்மானகவே நான் பார்க்கின்றேன்.

1989ம் ஆண்டு முதன்முதாலக ஓர் துடிப்பான இளைஞனாக பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்த ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி சிரேஸ்ட்ட உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்து வருகின்றார். 

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவரான ஹிஸ்புல்லா தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் ஹக்கீமுக்கு வயதில் குறைந்தவராக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்ற வகையிலும், ஹக்கீமிற்கு முதல் தான் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தவன் என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்தி செல்ல கூடிய எமதூர் அரசியல் தலைவன் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசினை உறுவாக்கிய மண்னான காத்தான்குடி மண் பெருமைபட்டுகொள்வதில் எந்த தப்பும் கிடையாது என்பது எவறாலும் மறுதளிக்க முடியாத உண்மையாகும்.

ஹிஸ்புல்லாவின் அரசியல் சானக்கியத்தினை வைத்து இலங்கை முஸ்லிம்களும், குறிப்பான கிழக்கு மாகாண முஸ்லிம்களும் இன்னும் பல அபிவிருத்திகளை எதிர்பார்த்து நிற்கின்றனர். அத்தோடு அரசியலில் நீண்ட கால நன்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பதற்கு ஹிஸ்புல்லா சிறந்த உதாரணமாகும். 

அதனாலேயேதான் தேர்தல் காலத்தில் ஆரசியல் ரீதியாக பல முரண்பாடுகளை சந்திக்கின்ற ஹிஸ்புல்லா தேர்தலுக்கு பிற்பாடு எல்லா அரசியல்வாதிகளிடமும் நட்பினை ஏற்படுத்தி தனதூரினையும் மாவட்டத்தினை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்ல முடிகின்றது. 

ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்க்கை வரலாறும், அவருடைய அரசியல் அபிவிருத்திகளும் அவர் உயிருடன் இருக்கும்பொழுதே காலத்தினால் அழிக்க முடியாத காத்தன்குடியின் அரசியல் சரித்திரம் என எழுதப்பட்டு விட்டது. இருந்தும் காத்தான்குடி மண்னும் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திகளை எதிர்பார்த்தே நிற்கின்றனர். 

அதற்கு இறைவன் நீண்ட ஆயுளினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லவிற்கு கொடுத்தருள வேண்டும் என பிரார்திக்கின்ற அதே நேரம் இளம் அரசியல்வாதிகள் அதிகளவில் ஹிஸ்புல்லாவிடம் அரசியல் கற்றுகொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -