அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக் கிழமை நாடு முழுவதிலுமுள்ள ஜும்ஆ மஸ்ஜிதுகளில் மனிதநேயப் பணிகளின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி குத்பா பேருரைகளை நிகழ்த்துமாறு கண்ணியமிக்க உலமாக்களை, மஸ்ஜித் நிர்வாகங்களை தாழ்மையுடுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசியஷூரா சபை ஆகியவை விடுத்துள்ள அறிக்கைகளை வாசிப்பதோடு களப்பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களிற்கு தங்களால் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு பொதுமக்களை அறிவுறுத்துதல் காலத்தின் கட்டாயமாகும்.
முதற்கட்ட அனர்த்த முகாமைப் பணிகள் தற்பொழுது அரசாலும், சிவில்சமூக அமைப்புக்களாலும், தன்னார்வ தொண்டர் நிறுவனங்களாலும் இயன்றவரை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டாலும் அடுத்தடுத்த கட்டங்களை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையிலான பூரண ஒத்துழைப்பை வழங்கநாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
பாதிக்கப்பட்டவர்களை விடவும் பாதிக்கப்படாத எங்களுக்கே இப்பொழுது சோதனைகள் அதிகரிடித்திருக்கின்றன, எமது சமுதாய தேசிய மனித நேயப் பணிகளை நாம் எவ்வாறு மேற்கொள்கின்றோம் என்ற சோதனையே மிகவும் பாரியசோதனையாகும்.
குறிப்பாக நபிலான உம்ரா ஹஜ் செய்ய நாட்டம் கொண்டுள்ளோருக்கு இம்முறை நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுதல் வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சகோதரர்களும் தம்மாளியன்ற பங்களிப்புக்களை உடன் செய்வதற்கு முன்வருதல் கட்டாயமாகும்.
அத்தோடு நிவாரண பணிகளுக்கு பணத்தாலும் பொருளாலும் உதவ முன்வருவோரது உதவிகளை மஸ்ஜிதுகளூடாக ஒருங்கிணைப்பது சிறந்த முன்னெடுப்பாக இருக்கும். இன்ஷா அல்லாஹ்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புற்று, உயிர் உடைமைகள் இழந்து, மற்றும் இடம் பெயர்ந்துள்ள மக்கள் அனைவர் மீதும்எ ல்லாம் வல்ல அல்லாஹ் கருணை காட்டுவானாக, அவர்களுக்கு சகிப்புத் தன்மையையும், பாதுகாப்பையும் வழங்கி மிக விரைவாக அவர்கள்இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபைசெய்வானாக.
தமது கடமைகளை உணர்ந்து மகத்தான அர்பணிப்புடன் இரவு பகலாக இடர்நீக்கும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை தம்மால் இயன்ற அனைத்துப் பங்களிப்புக்களையும் செய்கின்ற நல்ல உள்ளங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அவர்களது ஈருலக வாழ்விலும் நிறைவாக அருள் புரிவானாக.
அத்தகைய நல்லாவர்களை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர்கள் அவர்களது அன்பிற்குரியவர்கள் அனைவரதும் ஈருலக வாழ்விலும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக.
எங்கள் எல்லோரதும் நல்ல கருமங்களை அங்கீகரித்து பாவங்களை மண்ணித்து இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் கொடியசோதனைகளில் இருந்தும் அபயமளிப்பானாக.
