ஜே.எப்.காமிலா பேகம்-
களனி கங்கை பெருக்கெடுத்ததால், அதன் சுற்று பிரதேசங்களான, கொலன்னாவை, ஆனந்தராம மாவத்தை, சிங்கபுர, கடுவல, கொடிகாவத்தை, வெல்லம்பிடிய, மீகொட, சேதவத்தை, கொஹிலவத்தை, கித்தம்பஹூவ வென்னவத்தை, லன்சியாவத்த, அம்பகஹசந்தி மற்றும் மீத்தொட்டுமுள்ளையை சுற்றியுள்ள பிரதேசகளிலுள்ள, மக்களின் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு வெள்ள நீர் புகுந்ததால் , மக்கள் கடும் சிரமங்களுக்குள்ளாகி நிர்க்கதியாகி உள்ளனர்.
அத்துடன் வீடுகளுக்குள் இருந்தவர்கள் பலர் வெளியேறி இருப்பினும், சிலர் இன்னும் சிறிது நேரத்தில் நீர் வெளியேறி குறைந்து விடலாம் என்ற நம்பிக்கையில், உயர்ந்த மேல்கட்டிடங்களில், மரங்களில் ஏறி காத்திருந்தனர்.
எனினும் நீர் மட்டம் வர வரகூடிக்கொண்டு போயுள்ளதால், இப்பகுதியில் வாழ் மக்கள், ஆபத்துக்களுக்கும் முகம் கொடுக்கும், சந்தர்ப்பங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.அதில் பாம்புகளும் வெளிவரத்தொடங்கியதால், நிலமை மேலும் பல சிக்கல்களை உருவாக்கி உள்ளது.
இரண்டாவது நாளும், நீர் மட்டம் மேலும் 9அடி வரை கூடிக்கொண்டு போனாலும், எந்த அரசியல் உதவிகளும் உடனடியாக செயற்படாததால், மக்கள் மேலும் பல சிரமங்களுக்குள்ளாகி முகம் கொடுக்க நேரிட்டதாக, ஒரு சிலர் கவலையுடன் கூறியது, கண்கூடாக கண்ட ஒரு விடயமாகும். அத்துடன் பெறுமதியான வீடுகள், பொருட்கள் பல பாவனைக்கு எடுக்க முடியாதளவு வெள்ள நீரினால் அழிவுக்குற்பட்டுள்ளன.
புத்தகங்கள், உடைகள் என மீள பாடசாலைக்கு உபயோகிக்க எதுவும் இல்லாத நிலைக்கு பாடசாலை மாணவர்களும் நிர்க்கதியாகி உள்ளனர். இருப்பினும் இம்மக்களுக்கான உணவு, நிவாரண உதவிகள் முறையாக, எல்லா மக்களுக்கும் உரிய நேரத்தில், இதுவரை வந்தடையாமை இடம் பெயர்ந்து பட்டினியுடன் அல்லலுரும், மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
இரண்டாவது நாள் நீர் மட்டம் வெளியேராததால், சுமார் 200 பேர் வரை அப்பகுதியில் சிக்கி உள்ளதாகவும், இவர்கள் அறிந்தவர்கள், நண்பர்கள் என பலருடன் தொடர்பு கொண்டு, தம்மை காப்பாற்றுமாறு, அடிக்கடி வேண்டியுள்ள போதும் முறையான தொடர்புகள் இல்லாததால், பட்டினியுடன் தவிப்பதாக அறியப்படுகிறது.
மேலும் எச்சரிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து, வெளியேறுமாறு அறிவிக்கப்படின், உடனடியாக அப்புறப்படுமாறு, கடற்படையினர் மக்களை வேண்டிக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை தவிர்த்து, அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னரும் வெளியேரா முடியாமல் தவிக்கும், மக்களை காப்பாற்ற கடற்படையினர் ,முழு மூச்சாக முயற்சியில் உள்ளதாக, கடற்படைஊடக பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் வானிலை அவதான நிலையில் அறிவிப்பின்படி, கண்டி ரத்னபுர, குருநாகலை,நுவரேலியா, கேகல்லை மாத்தளை மற்றும் களுத்துறை போன்ற மாவட்டப்பிரதேசங்களில், மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாகவும், விசேடமாக சுழல் காற்றிலிருந்தும், அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறது.
100 தொடக்கம்150 மல்லி லீற்றர் இடையிலான, மழை வீழ்ச்சி நாடு பூராவும் எதிர்பார்க்கப்படுகிறது.