நினைவாற்றல் விருத்தியும் மூளை அபிவிருத்தியும் செயலமர்வு...!

எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழ் இயங்கும் இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கான "நினைவாற்றல் விருத்தியும் மூளை அபிவிருத்தியும்" தொடர்பான செயலமர்வு இன்று 04.05.2016 புதன்கிழமை காத்தான்குடி தாறுல் அர்கம் வளாகத்தில் இடம்பெற்றது.

இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் பெண்கள் பிரிவு இணைப்பாளர் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வுக்கு முன்மாதிரிப் பாடசாலையின் ஆண்கள் பிரிவு அதிபர் அஷ்ஷெய்க் ஹஸனலி நளீமி அதீதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு BCAS நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுக்கு BCAS நிறுவன சந்தைப்படுத்தல் முகாமையாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விரிவுரையை கொழும்பு BCAS நிறுவன பயிற்றுவிப்பாளர் எம்.சி.எம்.மக்சூத் மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய விரிவுரையை நிகழ்த்தினார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -