நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (23) அரச விடுமுறை தினம் அல்லவென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இம்முறை வழமையான வெசாக் விடுமுறை தினங்கள் இரண்டும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வந்துள்ளதனால், எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.
இருப்பினும், நாட்டில் தற்பொழுது எற்படுள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க, அரச ஊழியர்களின் பங்களிப்பு அவசியம் என்பதனால் விடுமுறை வழங்க முடியாதுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.