நிலம் தாழ் இறக்கம் - 25 குடும்பங்கள் இடம் பெயர்வு

தெல்தோட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெல்தோட்ட குரூப் தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறங்கிளதால் லயன் இலக்கம் 01, லயன் இலக்க்ம் 02 வீட்டு குடியிருப்பு தொகுதிகள் வெடிப்புற்ற நிலையில் 25 குடும்பங்கனை சேர்ந்த 110 பேர் இடம் பெயர்ந்து கலஹா தெல்தொட்ட குரூப் திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தற்கலிகமாக தங்க வைக்க்பட்டுள்னர். 

ஆரம்பகட்ட நடவடிக்கையாக பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர் உணவு பொருட்கள் வழங்கள் உட்பட அனைத்து வசதிகளும் மேற்க்கொள்ளபட்டுள்ளது.

பாதிப்புக்கு உள்ளான மக்களில் 10 பாடசாலை மாணவர்களும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் 05 பேரும் 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் 02 பேரும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 03 பேரும் அடங்குகின்றனர். தற்போது இவர்களுக்கு மலகச கூட வசதி, மருத்துவ வகதி குறைபாடாக காணப்படுகின்றது.

பாதிப்பு உள்ளான மக்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களுக்கு தேவையான ஆரம்பகட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளது அடுத்த கட்டமாக எங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கும் தொடர்ந்து நிரந்தர வீடுகளுக்கும் செல்ல சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள்.
பா.திருஞானம்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -