இலங்கையில் மாநிலங்கள் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு தேவையான வகையில் மாநிலங்களை அமைத்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாநிலங்கள் அமைப்பது குறித்து யோசனை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்குத் தேவையான வகையில் மாநிலங்களை அமைப்பதற்கும், அவற்றை பிரிப்பதற்கும், ஒன்றிணைக்கவும் இடமளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் அங்கம் விக்கின்றார்கள் எனவும் அதனால், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.