மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன ஆயுதங்கள் தொடர்பில், குறித்த நேரத்தில் கடமையில் இருந்த 4 பொலிஸ் அலுவலர்களில் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து இவ்வாறு ஆயுதங்கள் காணாமல் போயிருந்தன.
பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த ரி.56 ரக துப்பாக்கி மற்றும் 5 கைத்துப்பாக்கிகள் என்பவற்றை இனந்தெரியாத ஒருவர் கொள்ளையிடடுச் சென்றுள்ளார்.
சம்பவத்தின் போது கடமையில் இருந்த 4 பொலிஸ் அலுவலர்கள் மது அருந்தி இருந்தார்களா? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர்கள் மதுபோதையில் இருக்கவில்லை என்று ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.