ஹசன் அலி அவர்கள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேட்பதனால்தான் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்க முடியாதுள்ளது என தலைவர் ஹக்கீம் அபாண்டமான பொய் குற்றச்சாட்டுங்களை மக்களிடையே பரப்பி வருகிறார்.
இதில் எந்த உண்மையும் கிடையாது. என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இம்போட்மிரர் செய்தி ஆசிரியர் ஒருவர் செயலாளர் நாயகம் ஹஸன் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் ஒரு போதும் தேசியப்பட்டியல் கேட்கவில்லை கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கே விருப்பம் கொண்டிருந்தேன் அப்போது தலைவர் ஹக்கீம் உங்களுக்கு தேசியப்பட்டியல் தருகிறேன் நீங்கள் போட்டியிட வேண்டாம் என கூறி தேசியப்பட்டியலை உறுதிப்படுத்தினார்.
பின்னர் அவரே என்னை ஏமாற்றினார் அத்தோடு நான் தேசியப்பட்டியல் விடயத்தை மறந்து விட்டேன். ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவாதாக பல மேடைகளிலும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் சத்திய வாக்கு அளித்து இருப்பதாக அறிகிறேன்.
தற்போது உள்ள தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு கொடுப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன் ஏன் தலைவர் இன்னும் தயக்கம் காட்டுகிறார் என்ற கேள்வியுடன் முடிக்கிறார் செயலாளர் நாயகம் ஹஸன் அலி.
