ஹாசிப் யாஸீன்-
தமிழ் மக்களின் 30 வருட தியாகத்திற்கு புதிய அரசியல் அமைப்பு திருத்தத்தில் அவர்கள்விரும்பு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு தடையாக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இருக்கமாட்டாது. வடக்கு முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தயோசனைகள் முஸ்லிம்களை திருப்திப்படுத்தாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின்யோசனைகளை முஸ்லிம் காங்கிரஸூம், முஸ்லிம் சமூகமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
வீ ஆ ஸஹிரியன் அமைப்பின்; ஏற்பாட்டில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில்கடந்த வருடம் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை 'ஸஹிரியன் விருது' வழங்கிகௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் எம்.எஸ்;. மண்டபத்தில் வியாழக்கிழமை (14)இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பிரதிஅமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
வீ ஆ ஸஹிரியன் அமைப்பின் தலைவர் றிசாத் ஷரீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை ஸாஹிராகல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் உள்ளிட்ட முன்னாள் அதிபர்கள், பிரதி அதிபர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை கிழக்குமாகாணத்தில் வாழும் முஸ்லிம், தமிழ், சிங்கள மக்கள் தீர்மானிக்க வேண்டும். இதனைவடக்கு முதலமைச்சரோ அல்லது வடக்கு மாகாண சபையோ தீர்மானிக்க முடியாது. வடக்குகிழக்கு இணைப்புக்கான தீர்மானத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்க முடியும்.இந்த ஜனநாயக உரிமையை அம்மக்களுக்கு வழங்க வேண்டும்.
வடக்குடன் கிழக்கை இணைக்கும் எந்தத் தேவையும் முஸ்லிம்களுக்கு இல்லை, தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டுமானால் கிழக்குமுஸ்லிம்களுக்கான தீர்வு தமிழ் மக்களுக்கு சமாந்திரமான தனி மாநில அல்லது மாகாண அலகா என்பது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூற வேண்டும்.
வடக்கு முதலமைச்சரினால் வட மாகாண சபையில் முன்மொழியப்பட்ட அரசியல் திட்டஆலோசனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் அல்ல. இதனை நாம்நிராகரிக்கின்றோம்.
வடக்கு முதலமைச்சரினால் முன்மொழியப்பட்ட அரசியல் திட்ட ஆலோசனையில் நாட்டின் 7மாகாணங்களையும் இணைத்து ஒரு மாநிலமும், வடக்கு கிழக்கை இணைத்து ஒருமாநிலமுமாக இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும். இணைந்த வடக்கு கிழக்குமாநிலத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு பிராந்திய சபை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம்ஏற்றுக்கொள்ள முடியாது.
வடக்கு முதலமைச்சரின் இந்த அரசியல் திட்ட யோசiனைகள் நாட்டை இரண்டாக பிரிக்கும்திட்டமாக தெற்குலுள்ள கடும் போக்காளர்களை பார்க்கும் அளவுக்கு தூண்டி விட்டிருக்கும்.
அண்மையில் ஜனாதிபதி வடக்கு சென்றவேளை தெற்கிலுள்ளவர்கள் சமஷ்டி என்றால்அஞ்சமடைகின்றனர், வடக்கிலுள்ளவர்களுக்கு ஒற்றையாட்சி என்றால் பிடிக்காதுள்ளது எனக்கூறியிருந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக நாட்டின் ஜனாதிபதியும்,பிரதமரும் மிக சிரத்தை எடுத்து தெற்கிலுள்ளவர்களை சமாளித்து வருகின்றனர்.
தீர்வுத் திட்ட யோசனைகள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸூம்கடந்த காலங்களில் சுமுகமாக பேசி வருகின்றது. இந்த நிலையில் வட மாகாணமுதலமைச்சரின் முன்மொழி யோசனைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
