காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வில் 28க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு இரத்தங்களை வழங்கினர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகள் அனைவருக்கும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் அவர்களும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா அவர்களினாளும் இவ் குறுகிய கால இடைவெளியில் பங்குகொண்டமைக்காக நன்றிகளை தெரிவித்தனர்.




