திருகோணமலை விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் ஹரிஸினால் நிதியொதுக்கீடு..!

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிரின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நூற்றி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியினை மைதானங்கள் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் இன்று வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார். 

இதில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக முப்பது இலட்சம் ரூபாய் நிதியினையும்,பாயும் மீன்கள் விளையாட்டுக் கழகத்திற்கு இருபது இலட்சம் ரூபாய் நிதியினையும், தோப்பூர் பொது விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக முப்பது இலட்சம் ரூபாய்யினையும், அல்ஹம்ரா விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு பத்து இலட்சம் ரூபாவும், தம்பலகமம் பொது விளையாட்டு மைதான மைதான அபிவிருத்திக்கு இருபது இலட்சம் ரூபாவும், இறக்கக்கண்டி அல் ஹம்ரா விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு இருபது இலட்சம் ரூபாவும், மற்றும் குச்சவெளி அந்நூரிய்யா விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு இருபது இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -