இன்று காலை 11 மணியளவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று முதலாம் பிரிவை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து இடம் பெற காரணம் அக்கரைப்பற்றில் இருந்து அட்டளைசேனையை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக சந்தியில் பாடசாலை மாணவர்கள் வீதியை கடக்க முயன்ற போது மோட்டார் வாகனம் இவ் மாணவர்களில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.
