அ.ஸெய்னி-
மூன்றாம் தர அதிபர் வெற்றிடங்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரிட்சையில் சித்தி பெற்றவர்களுக்காக நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலிருந்து தகைமை பெற்ற 3779 பேருக்கு விரைவில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் மாகண ரீதியாக
வடக்கு 380 பேர் , கிழக்கு 338 பேர்,
மேல் 760 பேர், மத்திய 584 பேர்,
தென் 531 பேர், வடமேல் 428 பேர்,
வடமத்திய 264 பேர், ஊவா 243 பேர், சப்பிரகமுவ 251 பேர். நியமனம் பெறவுள்ளனர். மூன்றாம் தர அதிபர்களாக நியமனம் பெறவுள்ளவர்களுக்கான பயிற்சிகள் 2016 மே 02 ம் திகதி தொடக்கம் மாகண பயிற்சி நிலையங்களில் இடம் பெளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.