பயங்கரவாத சக்திகளிடம் இருந்து அரேபிய தேசத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் கடந்த சனிக்கிழமை (26) தொடக்கம் சவுதி அரேபியாயின் வடக்குப் பிராந்தியத்தில் “வடக்கின் இடி முழக்கம்” எனப் படும் மாபெரும் இராணுவ பயிற்சி துவங்கப்பட்டதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகப்பெரிய இராணுவ பயிற்சியாக கருதப்படும் மேற்படி “வடக்கின் இடி முழக்கம்” இராணுவ பயிற்சியில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பஹ்ரைன், செனகல், சூடான், குவைத், மாலத்தீவு, மொராக்கோ, பாக்கிஸ்தான், சாத், துனிசியா, கொமொரோஸ், ஜிபூட்டி, ஓமன், கத்தார், மலேஷியா, எகிப்து, மூரித்தானியா, மொரிஷியஸ் ஆகிய 20 நாடுகள் பங்கேற்றுள்ளன.
குறித்த பயிற்ச்சியில், 20 ஆயிரம் ஏவுகணைகள், 2540 போர் விமானங்கள், 460 ஹெலிகாப்டர்கள் மற்றும் 3 இலட்சத்து 50 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அரசியல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடு இல்லாத நிலையிலேயே இந்த இராணுவ பயிற்ச்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
