பொறியலாளர் அப்துர் ரஹ்மான் பாலர் பாடசாலைகளுக்கு விஜயம்..!

M.T. ஹைதர் அலி-
காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கும் சில பாலர் பாடசாலைகளுக்கான விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கானதேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (14.03.2016)மேற்கொண்டிருந்தார்.

அந்த வகையில் றிஸ்வி நகர் பகுதியில் இயங்கும் அல்இக்பால் பாலர் பாடசாலை, காத்தான்குடி 5ம் குறிச்சியில்இயங்கும் ஜாமியுழ்ழாபிரீன் பாலர் பாடசாலை மற்றும் அப்றார் பகுதியில் இயங்கும் அப்ரார் பாலர் பாடசாலைஆகியவற்றுக்கே அவர் இந்த விஜயத்தினை மேற் கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, இப்பாலர் பாடசாலைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள், குறைபாடுகள் மற்றும்தேவைகள் குறித்து பாடசாலை ஆசிரியைகளுடனும், அதன் நிர்வாகத்தினருடனும் அவர் விரிவாகக்கலந்துரையாடினார்.தமது பாடசாலைகளின் உடனடித் தேவைகளாக சீருடைகள், கற்றல் உபகரணங்கள், மற்றும்தளபாடங்கள் போன்ற விடயங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.

அவற்றுக்கான சில உடனடித் தீர்வுகளை தமது சொந்த நிதியிலிருந்து உடனடியாக பெற்றுத்தருவதாகவாக்குறுதியளித்த அவர், பாலர் பாடசாலைகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியானவேலைத்திட்டங்களை NFGG முன்னெடுக்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபையின் பிரதிநிதிகளான ASM. ஹில்மி, PMM. நவாஸ் மற்றும் KMA. காதர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -