தெஹி­வளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்­குதல் - இரு­வ­ருக்கு சிறைத்­தண்­டனை

1996ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் தெஹி­வளை ரயில் நிலைய குண்டுத் தாக்­குதல் சம்­பவம் தொடர்பில், தமி­ழீழ விடு­தலைப் புலி அமைப்பின் சந்­தே­க­ந­பர்கள் இரு­வ­ருக்கு 2 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது சந்­தே­க­ந­பர்கள் தமது குற்­றத்தை நீதி­மன்றில் ஒப்புக் கொண்­டுள்­ள­னர்.

விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஐ­ராங்­கனி பெரேரா குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் முன்­ன­தாக சுமார் 20 வரு­டங்கள் விளக்­க­ம­றி­யலில் இருந்­துள்­ளதால், 2 வரு­டங்கள் தளர்த்­தப்­பட்ட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

மேலும், தண்­டனைக் காலம் முடிந்­ததும் ஒரு வருடம் வவு­னியா பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகா­முக்கு இவர்கள் அனுப்­பப்­பட வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்­பிட்­டுள்ளார்.

முன்­ன­தாக, இந்த தாக்­குதல் சம்பவம் தொடர்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -