கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மியை கடத்தி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த குற்றவாளியான சமன் ஜயலத்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் வழக்கு இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்ட சமன் ஜயலத்திற்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற 5 வயதுடைய சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னரே துணியினாலான பட்டி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
