முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர்.
தம்மைக் கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை போன்றவற்றுக்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால்யோஷித உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதானமை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பதால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறும், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
