ஊடகப் பிரிவு-
மேல் மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும்; 2004 ஆம் ஆண்டு தொடக்கம் ஷாபி ரஹீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து பயணித்து வருகின்றார். கடந்த 12 வருடங்களில் வருடத்திற்கு ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் 12ஆயிரம் பேரின் வாக்குகளை பெற்றுத்தந்தள்ளார். அதனுடைய பிரதிபளிப்பு தான் மேல் மாகாணத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 34ஆயிரம் வாக்குகளை பெறுகின்ற நிலவரத்தை இவர் உருவாக்கியுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நடைபெற்ற தையல் பயிற்சி நெறியினை முடித்த மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கண்காட்சி ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை (14) முற்பகல் வத்தளை, காந்திநகர் வேலகொட கனிஷ்ட முஸ்லிம் வித்தியாலயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வத்தளை தொகுதி அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.இஸ்மத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
இப்பிரதேசம் சார்ந்த பெண்களுக்கு 10 நாட்களுக்குள் சுயதொழிலொன்றை தைரியமாக முன்னெடுப்பவர்களாக அவர்களின் ஆளுமைகளை விருத்தி செய்கின்ற வகையில் கருத்தரங்குகளுடனான விசேட தையல் வகுப்புக்களை வழங்கி அவர்களையும் சமூகத்தில் நல்லதொரு அந்தஸ்த்துடன் வாழ வைக்கும் முயற்சியில் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் சாதனைப்படுத்துள்ளார் என்றே கூறவேண்டும்.
இவரது இந்த செயற்பாடானது பெரிய அரசியல் கட்சியொன்றின் செயற்பாட்டை விடவும் மேலானது. மக்களை தலைமைகளோடு இணைந்து செயற்பட வைக்கும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஏனெனில், மேல் மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும்; 2004 ஆம் ஆண்டு தொடக்கம் அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து பயணித்து வருகின்றார். கடந்த 12 வருடங்களில் வருடத்திற்கு ஆயிரம் பேர் என்ற அடிப்படையில் 12ஆயிரப் பேரின் வாக்குகளை பெற்றுத்தந்தள்ளார். அதனுடைய
பிரதிபளிப்பு தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 34ஆயிரம் வாக்குகளை பெறுகின்ற நிலவரத்தை இவர் உருவாக்கியுள்ளார். மேல்மாகாணத்தில் இந்த மாவட்டத்தில் மாத்திரமே இந்த நிலவரம் ஏற்பட்டது. இதர 2 மாவட்டத்திலும் சிறிய முன்னேற்றமொன்றை அடைந்தோம். இருந்தாலும் இந்த நிலவரத்தை எதிர்காலத்திலும் தக்கவைத்துக் கொள்வதற்கும் மேலும் வளர்த்துகொள்வதற்கும் இத்தகைய உறுப்பினர்களின் முயற்சிகளை நான் வரவேற்கின்றேன் வாழ்த்துகின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதித்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஷபீக் ரஜாப்தீன் மற்றும் வத்தளை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நூஃமான் இனாமி உட்பட பொதுமக்களும் இதில் கலந்து கொண்டனர்.

