ஹட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி - அமைச்சர் திகாம்பரம் நிதி ஒதுக்கீடு

க.கிஷாந்தன்-
ட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு ‘வயர் மெஸ்’ அடித்து நவீன மயப்படுத்த மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் 75 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதற்கமைய தகரங்கள் அகற்றும் பணிகள் 29.02.2016 அன்று ஆரம்பமாகியுள்ளன.

அதனையடுத்து செய்யும் பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் திகாம்பரம் 01.03.2016 அன்று குறித்த இடத்திற்கு சென்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்..

அட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கு புகையிரத நிலையத்தை நவீன மயப்படுத்தல், புதிய சந்தைத் தொகுதியை நிர்மாணித்தல், பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு இலங்கை புகையிரத திணைக்களம், நகர அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இப் பணியை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -