வறிய மக்களிற்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!

பாறுக் ஷிஹான்-
ன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்கள் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வடமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான எச்.எம். றயீஸ் வழங்கியுள்ளார்.

இதற்கமைய பிளாஸ்டிக் கதிரைகள் மின்சார நீர்ப்பம்பிகள் என்பன பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுயதொழில் முயற்சியாளர்களினை ஊக்குவிக்குமுகமாக தெரவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு குறிப்பாக பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்டன.

இதன் போது மன்னார் முசலி நானாட்டான் மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களின் உள்ள பயனாளிகள் இப்பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் இப்பொருட்கள் அனைத்தும் மாகாண சபை உறுப்பினரின் மன்னார் அலுவலகத்தில் வைத்து மாகாணசபை உறுப்பினரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள்இ ஊழியர்கள் மற்றும்; ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிப்போராளிகள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -