ஹோமாகம நீதிமன்ற திடலில் கலகம் ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டது தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேர் இன்று பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை ஒருவருக்கு தலா 5 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகம நீதவான் ரங்க திஸா நாயக்க உத்தரவிட்டார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் , ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்துக்குரிய இத்தேகந்தே சந்தாதிஸ்ஸ தேரர் , சிங்க ராவய அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் உள்ளிட்ட 6 தேரர்கள் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் , சம்பவம் தொடர்பாக கைது செய்யபட்டுள்ள மேலும் 5 பேர் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
