யோசித்தவுக்கு பிணையும் இல்லை, பதவியும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

குறித்த மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, யோசித்த ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க கடுவளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையானது, பிணை சட்டத்தின் விதிகளுக்கு முரணானது எனக் குறிப்பிட்டார். 

எனவே தனது கட்சிக்காரரை குறித்த மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை பிணையில் விடுவித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் கோரியிருந்தார். 

எனினும், கடுவலை நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிணை சட்டத்தின் விதிகளுக்கு முரணானது அல்ல என, அரச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். 

விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, குறித்த கோரிக்கையை நிராகரித்ததோடு, மனு மீதான விசாரணையை மார்ச் 8ம் திகதிக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தார். 

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் யோசித்த கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, இலங்கை கடற்படையில் இருந்து யோசித்த ராஜபக்ஷ தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியும் இல்லை 

இலங்கை கடற்படையில் இருந்து யோசித்த ராஜபக்ஷ தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை அடுத்து, பெப்ரவரி 28ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர், அண்மையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். 

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதன்படி, கடற்படைத் தலைமையகத்தின் அனுமதியின்றி யோசித்தவால் கடற்படை முகாமுக்குள் பிரவேசிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -