அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு! புதிய அமைப்பு உதயம்...!

யு.எல்.எம். றியாஸ்,எஸ்.அஷ்ரப்கான்-

ம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சிலர் உள்ளிட்ட 28 பேர் நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஒன்று கூடி புதிய ஊடகவியலாளர்கள் அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளார்கள். 

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான கலாபூசணம் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் பலரும் கருத்துக்களை முன் வைத்தார்கள். 

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையற்றதாகவும், அதன் தலைவர் தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. 

அத்தோடு, ஊடகவியலாளர்களின் நலன்களில் அக்கறையற்றதொரு அமைப்பாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயினும், அவ்வமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கு பல முயற்சிகள் எடுத்த போதும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தலைவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கவில்லை. கேள்விகள் கேட்கின்றவர்கள் சம்மேளனத்தின் கூட்டங்களுக்கு திட்டமிட்டு அழைக்கப்படுவதில்லை. 

ஒரு சிலரை கைக்குள் வைத்துக் கொண்டு தாம் நினைத்தைச் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டன. இதனால், நாம் தனி அமைப்பாக செயற்படுவதுதான் சிறந்தது எனப் ஊடகவியலாளர் பலரும் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரம் (Amparai District Journalists’ Forum) என்ற பெயரில் இயங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. 
அதற்கமைவாக, 

தலைவர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன், செயலாளர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் 
பொருளாளர்: யூ.எல்.மப்றூக் 
அமைப்பாளர்: யூ.எல்.எம்.றியாஸ் 
பிரதித் தலைவர்கள்: எஸ்.எல்.எம்.பிக்கீர் மற்றும் எம்.எஸ்.எம்.ஏ.மலீக் உபசெயலாளர்: வி.சுகிர்தகுமார் 
கணக்காய்வாளர்: ஏ.பி.எம்.அஸ்ஹர் 

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: 
ஏ.எல்.எம்.சினாஸ் (மருதமுனை), 
எஸ்.எல்.எம்.றம்ஸான் (கல்முனை), 
றியாத் ஏ மஜீத் (சாய்ந்தமருது), 
ஏ.அஸ்ஹர் (மாளிகைக்காடு), 
எம்.ஐ.ஏ.கபூர் (நிந்தவூர்), 
எம்.எஸ்.எம்.ஹனீபா (ஒலுவில்), 
பீ.முஹாஜிரீன் (பாலமுனை), 
எம்.எப்.றிபாஸ் (அட்டாளைச்சேனை), 
என்.எம்.எம்.புவாத் (சம்மாந்துறை), 
யூ.கே.காலிதீன் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -