ஷபீக் ஹூஸைன் -
கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (16) பிற்பகல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துறையாடலில் அமைச்சுக்கு 2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கல்முனை நவீன நகரமயப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்திற்கு ஆரம்ப பணிகளை தொடங்குவதற்கான பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஆரம்ப பணிகளை மேற்கொள்வதற்கு கல்முனையில் நகர திட்டமிடல் உப காரியாலயம் அமைத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதுடன், மீண்டும் ஓரிரு வாரங்களில் இது சம்பந்தமான கலந்துரையாடால் நடைபெற உள்ளதாக இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். ஸல்மான், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரிகள், காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி நிறுவன உயரதிகாரிகள், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், நீர்பாசண தினைக்களத்தின் உயரதிகாரிகள், மற்றும் அமைச்சின் மேலதிகச் செயலாளர்களான எம்.எச். முயூனுதீன், திருமதி எல். மங்கலிகா, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல். லத்தீப், உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.