மின்சார தடைக்கு காரணம் அவதானமின்மை - திலக் சியம்பலாபிட்டிய

சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் அனைத்து பாகங்களிலும் ஏற்பட்டிருந்த மின்சாரத் தடைக்கு, அவதானமின்மையே காரணம் என்று, மின்சார சக்தி தொடர்பான நிபுணர் பேராசிரியர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த குறைபாடுகள் குறித்து அவதானம் செலுத்தப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, நேற்று இரவும் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது சீராக்கப்படும் வரையில் இவ்வாறான மின்சார தடைகள் ஏற்படக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மின்சாரத்தை முடிந்த அளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபை பொது மக்களை கோரியுள்ளது.

தற்போதும் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -