காத்தான்குடியில் கட்டாய மதமாற்றம் இடம்பெறுகிறது..?

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகளோ அல்லது சமூக நிறுவனங்களோ வலுக்காட்டாயமாகவோ அல்லது பணத்தாசை காட்டியோ மாற்றுசமய மக்களை இஸ்லாமிய மார்க்கத்தினுள்ளே இழுத்துவரவில்லை.

மாறாக தம்முடைய சமயக்கோட்பாடுகள் மற்றும் சமூக, சமுதாய கட்டமைப்புக்களின் மீது அதிருப்தி கொண்ட அதிகமான இந்து, கிறிஸ்த்தவ மக்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறானவர்கள் இஸ்லாமிய சமயத்தின் மீதும் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் கொண்ட சரியான புரிந்துணர்வின் காரணமாக இஸ்லாம் சமயத்தை தமது சுய விருப்பத்திற்கமைய தேர்ந்தெடுக்கின்றபோது அவர்களை வரவேற்கக்கூடிய பணியைத்தான் சமூக நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.


மேலும் அவ்வாறு இஸ்லாமிய சமயத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்கின்ற மக்களுக்கு இஸ்லாம் சமயத்தை பற்றிய முறையான அடிப்படை கல்வி மற்றும் வழிபாட்டு முறைகளை கற்பிக்கவேண்டிய அவசியமான நிலைமை காணப்படுவதால் அதற்காக முஸ்லிம் தனவந்தர்கள் வழங்கக்கூடிய நிதிகளின் மூலமாக காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதனை செயற்படுத்திவருகிறது.

இது தவிர இஸ்லாமிய அமைப்புக்களோ தனிநபர்களோ இந்து, கிறிஸ்த்தவ மக்கள் வசிக்கக்கூடிய பிரதேசங்களுக்கு சென்று அங்கே சமயப்பிரச்சாரம் செய்வதோ, பணத்தாசை காட்டி அம்மக்களை மதமாற்றம் செய்வதோ எந்தவொரு இடத்திலும் இதுகாலவரை நடைபெற்றதாக பதிவுகள் இல்லை.

அவ்வாறு கட்டாய மதமாற்றம் செய்யவேண்டிய யாதொரு தேவைப்பாடும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கடுகளவும் கிடையாது. மேலும் இஸ்லாம் சமயமானது கட்டாய மதமாற்றத்தை கண்டிக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய ஒரு சமயமாகவும் இருந்துவருகிறது. மாத்திரமன்றி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவர்களால் அந்த சமயங்களை சரியாக, முறையாகப்பின்பற்றி தமது வாழ்வியல்நெறியாக ஏற்று வாழவும் முடியாதென்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

எனவே கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பை தளமாகக்கொண்டு இயங்கிவருகின்ற சில துவேசதார ஊடகங்கள் காத்தான்குடிவாழ் இஸ்லாமிய அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் வறுமை நிலையிலுள்ள மக்களிடம் பணத்தாசை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வதாக பரப்பி வருகின்ற செய்தி உண்மைக்குப்புறம்பானது. எதுவித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாதது என்பதை உரியவர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
முஹம்மது நியாஸ்-  ஜப்னா முஸ்லிம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -