கல்குடா பாடசாலைகளின் உயர்தர விஞ்ஞான மாணவர்களுடைய பெறுபேற்றினை அதிகரிக்க முயற்சி..!

அஹமட் இர்ஷாட்-
ருகின்ற 2017ம் வருடம் தனது நூற்றாண்டு விழாவினை எதிர்பார்திருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது கல்குடா பிரதேசத்தில் பாரியளவிலான வளப்பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களின் தட்டுப்பாடுகளுக்குக்கு மத்தியில் உயர்தர மாணவர்களின் கணித, விஞ்ஞான வகுப்புக்களை சுமார் பத்து வருடங்களாக ஆரம்பித்து வழி நடாத்தி வருக்கின்றது. 

ஆகவே அதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய பாடசாலைகளில் விஞ்ஞான, கணித வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு அப்பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் எதிர் நோக்கி வருக்கின்ற குறிப்பிட்ட குறைகள் சம்பந்தமாக பிரச்சனைகளை கருத்தில் கொண்டமையினாலும், கல்குடா பிரதேசத்திலிருந்து அதிகப்படியான மாணவர்கள் உயர்தர விஞ்ஞான, கணித வகுப்புக்களில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதியினை பெற வேண்டும் என்ற உயரிய சமூக சிந்தனையுடனும் ,

முதற்கட்டமாக கல்குடா பிரதேசத்திலுள்ள மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் கல்வி கற்கின்ற உயர்தர கணித, விஞ்ஞான வகுப்பு மாணவர்களையும் ஒருங்கிணைத்து 2016ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மேலதிக உயர்த கணித விஞ்ஞான வகுப்பு பாடங்களை கற்பிக்கும் நிகழ்ச்சி நிரலினை ஆரம்பித்துள்ளது.

இது சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் ஜுனைட்......

எமது நாட்டினை பொறுத்த மட்டில் விஞ்ஞான கணித துறைகளிலே அதிகளவிலான வேலை வாய்புக்களும், வெற்றிடங்களும் காணப்படுகின்ரமையினால் கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களை கணித விஞ்ஞான பிரிவுகளில் வளர்தெடுக்க வேண்டிய முக்கிய கடமைப்பாடானது பிரதேசத்தில் முதன் முதலில் கணித விஞ்ஞான பிரிவினை சுமார் பத்து வருடங்களுக்கு முன் ஆரம்பித்து அதிகளவிலான பெற்பேறுகளை பெற்றுள்ள பாடசலை என்ற ரீதியில் எமது பாடசாலையான ஓட்டமாவடி தேசிய பாடசலைக்கு இருக்கின்றது. 

அந்தவகையிலே வளப்பற்றாகுறைகளுடன் பிரதேசத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் விஞ்ஞான கணித பிரிவுகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களிலிருந்து உயர்தர பிரிவில் கணித. விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை வரவழைத்து இவ்வாறான மேலதீக கற்பித்தல் நிகழ்ச்சி நிரலினை ஆரம்பித்துள்ளோம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் எமது பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட கணித விஞ்ஞான வகுப்புக்களுக்கு தேவையான உதவிகளை மிகவும் நேர்த்தியுடன் மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களின் பெறுபேற்றினை ஒவ்வொரு வருடமும் அதிகப்பரிப்பதற்கு அதிக பங்கினை வழங்கி வருக்கின்ற பிரதேசத்தில் இயங்குக்கின்ற கல்வி நிறுவனங்களான, 

விஞ்ஞான உயர் கல்வி நிறுவனமும், கல்வி தொழில் வழிகாட்டல் அமைப்பும், முக்கியமாக எமது பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியரான எம்.எம்.நவாஸ் ஆசிரியரும் இவ்வாறு ஏனைய பாடசலைகளிலும் கல்வி கற்கின்ற உயர்தர கணித, விஞ்ஞான வகுப்பு மாணவர்களின் எதிர்கால பெறுபேறுகளில் நல்ல முடிவுகள் முடிவுகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு செயற்படுவதினால்தான் இவ்வாறான முடிவுகளை எமது பாடசாலையினால் முன்னெடுக்க முடிகின்றது. 

அத்தோடு முதற் கட்டமாக மீராவோடை அல்-ஹிதாய பாடசலை மாணவர்களை இந்த நிகழ்ச்சி நிரலில் இணைத்துக்கொண்டுள்ளதோடு பிரதேசத்தில் உள்ள ஏனைய பாடசலைகளில் கல்வி கற்கின்ற உயர்தர மாணவர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -