தெற்காசிய விளையாட்டு விழாவில் சாதனை படைத்த பொத்துவில் அஷ்ரஃபை அமைச்சர் ஹக்கீம் கௌரவிப்பு..!

ஜெம்சாத் இக்பால்-

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவஹாட்டி நகரில் இடம்பெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நிறைவடைந்து இலங்கை வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், பொத்துவில்லை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் அதில் தங்கப் பதக்கமொன்றையும், வெண்கலப் பதக்கமொன்றையும் சுவீகரித்ததை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் புதன்கிழமை (17) முற்பகல் தமது அமைச்சில் அவரை பாராட்டி கௌரவித்ததோடு, நன்கொடையும் வழங்கினார். 

பொத்துவில்லை பிறப்பிடமாக கொண்ட முஹம்மத் அஷ்ரப் தனது ஆரம்ப கல்வியை அங்குள்ள அல்-இர்பான் வித்தியாலயத்திலும், உயர் தர கல்வியை பொத்துவில் மத்திய கல்லூரியில் வணிகப் பிரிவிலும் பயின்றுள்ளார். 

இவர் 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த லுசபோனியா (டுரளழிhழலெ புயஅநள) விளையாட்டு போட்டியில் 400ஓ100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற உலக இராணுவ விளையாட்டு போட்டியில் 400X100 அஞ்சலோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 

அத்தோடு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவஹாட்டி நகரில் இடம்பெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 400X100 அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்து இவர் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய மெய்வல்லுநர் அணியின் உறுப்பினராகவும் விளங்குகிறார். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது அமைச்சில் இலங்கை மெய்வல்லுநர் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக முஹம்மத் அஷ்ரபை பாராட்டி நன்கொடை வழங்கி கௌரவித்ததோடு, எதிர்காலத்தில்; அவர் மேற்கொள்ளவிருக்கும் வெளிநாட்டு திறந்த நிலை மெய்வல்லுநர் விளையாட்டு போட்டிகளுக்கான அனுசரணையை தமது சொந்த செலவில் வழங்குவதற்கும் முன்வந்துள்ளார். 

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.நயீமுல்லாஹ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.என்.முபீன் மற்றும் அமைச்சரின் பாராளுமன்ற இணைப்பாளர் ஏ.எல்.எம்.ஜவ்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -