சுலைமான் றாபி-
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட நிந்தவூர் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நாளையும், நாளை மறுதினமும் (01,02) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 8.00 மணி முதல் பி.ப 6.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் 15 பாடசாலைகளை உள்ளடக்கிய சுமார் 300ற்கும் அதிகமான மாணவர்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றவுள்ளதாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
இது தவிர வலய மட்டப் போட்டிகள் எதிர்வரும் 03.03.2016ம் திகதி முதல் 25ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவற்றுள்..
03ம் திகதி - கரம் - மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியிலும்,
04ம் திகதி - உடற்பயிற்சி - கல்முனை வெஸ்லி உயர்தரக் கல்லூரியிலும்
05,06ம் திகதிகளில் - கபடி - நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையிலும்,
06ம் திகதி - கூடைப்பந்து - பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திலும்,
08ம் திகதி - செஸ் - மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியிலும்,
10ம் திகதி - எல்லே - கல்முனை சந்தாங்கேணி மைதானத்திலும்,
11ம் திகதி - Table Tennis - கல்முனை ஷாஹிரா கல்லூரியிலும்,
12ம் திகதி - வலைப்பந்து (பெண்களுக்கானது) - கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரியிலும்,
13ம் திகதி - கராத்தே - கல்முனை ஷாஹிரா கல்லூரியிலும்,
14ம் திகதி - உதைபந்து - கல்முனை சந்தாங்கேணி மைதானத்திலும்,
15ம் திகதி - உதைபந்து - கல்முனை வெஸ்லி உயர்தரக் கல்லூரியிலும்,
17ம் திகதி - கிரிகெட் - (ஆண்களுக்கானது) - நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலும்,
18ம் திகதி - கிரிகெட் - (பெண்களுக்கானது) - நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலும்,
19ம் திகதி - பூப்பந்தாட்டம் - (ஆண்களுக்கானது) - YFC கல்முனையிலும்
20ம் திகதி - பூப்பந்தாட்டம் - (பெண்களுக்கானது) - YFC கல்முனையிலும்
21, 22ம் திகதிகளில்- கரப்பந்து - கல்முனை வெஸ்லி உயர்தரக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளது.
இது தவிர மெய்வல்லுனர் போட்டிகள் இம்மாதம் 23,24 மற்றும் 25ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாகவும், போட்டிகள் இடம்பெறும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் மேலும் தெரிவித்தார்.
