தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தோல்வியடைந்த வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் சோமவீர சந்திரிசிறி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனுவான இந்த மனுவை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன், பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னணிலையில் இந்த மனு ஆராய்ப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கி்ய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மைத்திரி ஆதரவாளர்களான இவர்களை மகிந்த அணியினர் திட்டமிட்டு தோல்வியடைய செய்ததாக கூறப்படுகிறது.
