SLMCயின் தேசியப்பட்டியலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆதரவாளர்களும்...!

வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியபட்டியாலனது தேர்தல் முடிந்து பல மாத காலமாகியும் இது வரையில் கட்சியின் நம்பிக்கைக்குறியவர்களிடமிருந்து அப்பதவி உரியவர்களுக்கு சென்றடையவில்லை என்பதை நாம் அறிந்ததே

உண்மையில் இந்த தேசிய பட்டியலானது எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் கட்சியின் ஆதாரவாளர்களுக்கும் போராளிகளுக்கும் மத்தியில் பெரும் ஏமாற்றத்ததை கொடுக்க வி ருப்பதாக எம்மால் அறிய முடிகின்றது

ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற  இரண்டு ஆசனங்களை கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியாலனது வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை என்று இரண்டரை இரண்டரை வருடங்கள் நான்கு மாவட்டத்துக்கும் பிரித்துக் கொடுக்கப் போவதாக கட்சியின் உயர் பீடங்களிலிருந்து சில செய்திகள் கசிந்த வண்ணம் முன்னர் இருந்தன

ஆனால் தற்போது அந்த கதை மெல்ல மெல்ல மறைந்த நிலையில் இருக்கும் தருவாயில் தேசிய பட்டியல் தருவதாக இருந்த சொல்லியிருந்த சில ஊர்களின் பிரதிநிதிகளுக்கு வெவ்வேறு பதவிகளை வழங்கி கௌரவித்திருப்பது நிச்சயம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமூகத்துக்கு ஏமாற்றத்தையே கொடுக்கவிருக்கின்றது என்பது மறைமுகமாக எம்மால் அறிய முடிகின்றது

தற்போதய சூழ் நிலையில் தலைவர் தேர்தலுக்கு முன்னாடியே வாக்களித்திருந்த அட்டாளைச்சேனை தேசிய பட்டியலில் ஏதோ தில்லு முல்லு வரப் போவதாக இருக்கின்றது ஏனெனில் அட்டாளைச்சேனை நஸீர் அவர்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டு்ள்ளதால் இவ்வருடமும் எப்போதும் போலவே அட்டாளைச்சேனையின் தேசிய பட்டியல் பகல் கனவாகவே இருக்கக் கூடும் அதே போன்று கல் குடாவின் மகானும் கட்சியின் உயர் பீட உறுப்பினருமான கணக்கறிஞர் றியாழ் அவர்களுக்கும் தேசிய பட்டியலில் முதல் இரண்டரை வருடங்கள் அல்லது கடைசி இரண்டரை வருடங்களாவது கொடுக்கப்படும் என்று தலைவரே தானாக வந்து கல் குடாவின் மூத்த போராளிகளிடத்திலும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடத்திலும் குறிப்பிட்டு இருந்தது நாம் அறிந்ததே 

அதுவும் தற்போது ஏமாற்றத்தை தரக் கூடியதாகவே காணப்படுகின்றது ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் நடைபெற்ற கட்சியின் போராளர் மா நாட்டில் கணக்கறிஞர் றியாழ் அவர்களுக்கு கட்சியின் உயர் பீட உறுப்பினர் பதவி கொடுத்திருப்பது திடிர் மாற்றத்தை கடைசி நேரத்தில் மாற்ற முடியுமோ என்ற எண்ணம் இன்று பலரிடத்தில் தோன்றியிருக்கின்றது

கடந்த கால தேர்தல்களில் கட்சியின் தேசிய பட்டியலானது ஏறாவூரைச் சேர்ந்த கட்சியின் தவிசாளர் மற்றும் கட்சியின் செயலளார் நாயகம் ஹசன் அலி அவர்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது இது பல தடவைகள் கட்சியின் தலைவரின் பிரகாரம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இந்த தேசிய பட்டியலை கொண்டு இந்த தவிசாளரும் செயளாலரின் மூலமும் மக்கள் அடைந்த பலன்கள் மிக மிக அரிதே ஆகும்

இது ஒரு பக்கம் இருக்க நேற்று கட்சியின் நம்பிக்கைகுறியவரும் தலைவரின் மூத்த சகோதரருமான டாக்டர் ஹாபீஸ் தனக்கு கிடைத்த தேசிய பட்டியல் பதவியை ராஜினமா செய்துள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன எது எவ்வாரு இருந்தாலும் உண்மையில் இத் தேசிய பட்டியல் எம் பீ பதவியானது கடந்த காலங்களில் கொடுக்கப்பட்ட ஊர்களுக்கு கொடுக்காமல் கட்சியின் வளர்ச்சிக்காக பாடு படுகின்ற இளம் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அநேகரின் எதிர் பார்ப்பாக இருக்கின்றது 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -