நிஸ்மி-
அக்கரைப்பற்று கனிஷ்ட வித்தியாலயத்தில் இவ் ஆண்டு (2016) தரம் ஒன்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வித்தயாலய அதிபர் எம்.எச்.அப்துல் கபூர் தலைமையில் நேற்று முன்தினம் (20) இடம் பெற்றது.
நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, ஏ.எச்.பௌஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபீர், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஸபீஸ்,ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.சஹாப்தீன்;, ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியாகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதநிதிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்.எச்.ஹனிபா மௌலவி துஆப் பிரார்த்தனையின் பின் மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைக்க தொடர்ந்து ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி; ஏ.எச்.பௌஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபீர், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம்.ஸபீஸ்,ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.சஹாப்தீன், ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆகியோர் வித்தியாரம்பம் செய்து வைத்த பின் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.




