எம்.வை.அமீர் -
புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக, புலம்பெயர் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இலங்கை புலம் பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் அமைப்பாளர் ரகீப் ஜௌபார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை செயற்படுத்துவதற் கேற்றவாறு அரசியலமைப்பில் திருந்தங்கள் மேற்கொள்ளப் படல் வேண்டும். சிறந்த நியாயமான ஓய்வுதியத் திட்டம் உருவாக்கப் படவேண்டும் ; மேலும் , வெளிநாடுகளில் கல்வி பயின்று நாடு திரும்பிய எமது தொழிலாளர்களின் பிள்ளைகளை அரசாங்க பாடசாலைகளில் மீண்டும் சேர்த்துக் கொள்ளமுடியாத நிலை தொடர்கின்றது, இதற்கு காரணம் வெளிநாட்டு பாடசாலைகளின் கற்கைநெறி வித்தியாசமென்று கூறப்படுகின்றது. எனவே இதற்கு தீர்வுகானும் வகையில் கல்வி சட்டத்திலும் மாற்றம் அவசியம்.
இது போக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இலவச பல்கலைகழக அனுமதி , அவர்களுக்கான விசேட ஒதுக்கீடு போன்ற விடயங்களை கல்வி சட்ட சீர்திருதத்தினுடாகவே செய்ய முடியும். மேலும் , புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டுக் கொள்கையில் திருத்தம் அவசியம்.
இவ்வாறு பலதரப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது கருத்திற் கொள்ளப் படவேண்டும்.
அவ்வாறு புறக்கணிக்கப் படுமாக இருந்தால் , புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் உள்வாங்கப் படாத எந்தவொரு புதிய அரசியலமைப்பிற்கும் புலம் பெயர் தொளிலாளர்கள் ஆதரவளிக்கத் தயாரில்லை .
எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாம் சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை. வெளிநாட்டில் வாழும் தொழிலாளர்கள் 20 லட்சம்,மற்றும் உள்ளூரில் வாழும் 30 லட்சம் உறவுகள் அடங்கலாக சுமார் 33% வீத மக்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
