பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம்...!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அம்பேத்கர் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பல மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போது, திரும்பி போ என்று மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

ஹைதராபாத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் மோடி மௌனம் சாதித்து வருவதால் அவருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -