க.கிஷாந்தன்-
பொலிஸ் மா அதிபர் திரு.இளங்ககோன் அவரின் பணிப்புரைக்கமைய நாட்டின் அனைத்து பொலிஸ் காவல்நிலையங்களிலும் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையாளர்களின் முதலாம் ஆண்டுசெல்லும் பிள்ளைகளுக்கு ஆரம்ப கல்வியை ஊக்குவிப்புக்கென பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
அந்தவகையில் அட்டன் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்பொலிஸ் சேவையாளர்களின் முதலாம் ஆண்டு செல்லும் பிள்ளைகளுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும்புத்தக பைகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் 19.01.2016 அன்று காலை வைபவ ரீதியாக நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மசிரி முனசிங்க தலைமையில் அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள், அட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோட்டன்பிரிட்ஜ், வட்டவளை, நோர்வூட், கினிகத்தேனை ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகள், சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.