நிஸ்மி. அக்கரைப்பற்று-
பாடசாலைகள் கற்பிக்கும் இடங்களாக இல்லாது கற்கும் இடங்களான இருக்க வேண்டும் அப்போதுதான் நவீன சவால்களுக்கு முகம் கொடுத்து அவைகளை வெற்றி கொள்ளக் கூடிய அறிவும்,ஆற்றலும் திறன், ஒழுக்கம் உள்ளிட்ட சிறந்த ஆளுமைமிக்கவர்களாக எமது மாணவச் செல்வங்களை உருவாக்க முடியும் என்று அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஏ.ஜி.அன்வர் தெரிவித்தர்.
இந்த வருடம் (2016) அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் தரம் ஒன்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் வித்தியாரம்ப நிகழ்வும் கல்லூரி அதிபர் ஏ.ஜி.அன்வர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (18) இடம் பெற்றபோது நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்விற்கு வருகை தந்த அக்கரைப்பற்று வலயக் கல்;விப் பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம், ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளா்களான எச்.சீ.எம்.இப்றாஹம்,; ஐ.எல்.இப்றாஹிம், அவுஸ்திரேலியாவின் திட்ட உத்தியோகத்தர் மஜீட் முஹம்மட், ஓய்வு பெற்ற அதிபர் எம்.யூசுப், மக்கள் வங்கி உதவி முகாமையயாளர் எம்.நபீல், டாக்டர் ஏ.நபீல், கால் நடை வைத்தியர் எம்.ஏ.நதீர் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்;டனர்.
இதன்போது வலயக் கல்;விப் பணிப்பாளர் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம் ,கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.இக்பால் உள்ளிட்ட அதிதிகள் மாணவர்களுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்தபின் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.




