ரம்ஸீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்க முடியாமல் அபிவிருத்திகளை எதிர்காலத்தில் மக்கள் முன்னால் கொண்டு செல்வோம் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கெலிஓயா கலுகமுவ மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு அதிபர் ஸீ.எம்.எஸ். மஹ்பூப் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சமூகத்தில் பாடசாலைகள் என்ற நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் எதிர்கால சமூகம் பாடசாகைளில் தான் உருவாக்கப்படுகின்றது. எனவே சமூகத் தலைமைகள் பாடசாலைகளின் அபிவிருத்தியில் கரிசனை செலுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த போதிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையில் இருந்தது. எனினும் எதிர்காலத்தில் இந்நிலைமை ஏற்படாது என்று நம்ப முடியும்.
நாட்டில் தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை ஏற்றுமதி தொடர்பாக துரக்கி நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேயிலை ஏற்றுமதித்துறையில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்றார்.




