மன்னார் மாவட்டத்தில் கல்வி விருத்தியை தடை இன்றி மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வருடா வருடம் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி, ஏற்றத் தாழ்வு இல்லா கல்வியை சகலரும் பெறுவதற்காய் ஊடகவியலாளர் -டிலான் தலைமைலான "மன்னாரின் கல்விக்குரல்" அமைப்பு மிகுந்த அர்ப்பண சிந்தனையுடன் முன் மாதிரியான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக, இன்று காலை 10.30 மணி முதல், தெரிவு செய்யப்பட்ட 200 வறிய மாணவர்களுக்கு மிகவும் பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியில் இடம் பெற உள்ளது.
சவால் மிக்க ஊடகத் துறையில் பணியாற்றிக் கொண்டு தனது பிரதேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தன்னால் ஆன முன்னெடுப்புக்களை வருடா வருடம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர் S.N. டிலான் இற்கும் அவரின் "மன்னாரின் கல்விக்குரல்" அமைப்பிற்கும் - உள்ளூர் வெளியூர் பொது அமைப்புக்கள், சமூக அக்கறை மிக்க தனி நபர்கள், ஊடக உறவுகள் என நாலா பக்கம் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருவது இங்கு குறிப்பிடத் தக்கது .
A.M.Azmy .
